மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம்

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 22-01-2026 | 2:57 PM

Colombo (News 1st) மீனவர்களுக்கு அதிக சலுகைகளுடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி, நீரியல் வள திணைக்களம், விவசாய, கமநலக் காப்புறுதிச் சபை ஆகியன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மீனவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராச்சி தெரிவித்தார்.