மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதியதில் இருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 14-01-2026 | 2:30 PM

Colombo (News 1st) புத்தளம் - கல்லடி வீதியின் பாலாவி, அட்டவில்லு பகுதியில் இன்று(14) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

02 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டவில்லு பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் மற்றும் புத்தளத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.