விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை

by Staff Writer 14-01-2026 | 2:35 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(14) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விமல் வீரவன்ச மன்றில் ஆஜராகாததால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அமைச்சராக செயற்பட்ட 05 வருட காலப்பகுதிக்குள் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பான தகவல்களை வௌியிட தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.