சொஹரா புஹாரியின் கட்சி உறுப்புரிமை தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

by Staff Writer 13-01-2026 | 5:56 PM

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து முஸ்லிம் காங்கிரஸ் வௌியிட்ட கடிதத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(13) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக சொஹரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் கடிதத்தை வலுவற்றதாக்குமாறு சொஹரா புஹாரி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.