சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் காலமானார்..

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் காலமானார்..

by Chandrasekaram Chandravadani 13-01-2026 | 2:44 PM

Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இன்று(13) அதிகாலை காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தமது 81ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெஹிவளை ஹில் ஸ்ட்ரீட், சிறிவர்தன வீதியிலுள்ள இலக்கம் 11C/1 என்ற முகவரியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளன.