.webp)
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, குருணாகல், காலி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.