இஷாரா தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற திட்டம்

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை

by Chandrasekaram Chandravadani 16-10-2025 | 8:31 AM

Colombo (News 1st) நேபாளத்தில் கைது செய்யப்பட்ட க​ணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இஷாரா செவ்வந்தி, J K பாய், சுரேஷ் மற்றும் தக்‌ஷி ஆகிய சந்தேகநபர்கள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு புதுக்கடை இலக்கம் 06 நீதிமன்ற அறைக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொலையின் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்.

நேபாள பாதுகாப்பு பிரிவினருடனான விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேகநபர்கள் நேற்று(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.