பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு புதிய பணிப்பாளர்

by Staff Writer 15-10-2025 | 8:29 PM

Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரஷாந்த  பொலிஸ் மேலதிகப் படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் H.M.C.B.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர் இதுவரை காலமும் கொழும்பு தெற்கு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.

இதனிடையே, தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.பி.பீ.சமரபால, தெல்தெனிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.