சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க பிணையில் விடுவிப்பு

by Staff Writer 15-10-2025 | 5:55 PM

Colombo (News 1st) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(15) பிற்பகல் அவர் ஆஜரான நிலையில் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கடந்த வௌ்ளிக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.