பிரதமராக பதவியேற்று 26 நாட்களில் இராஜினாமா

செபஸ்டியன் லுகோர்னு பிரான்ஸ் பிரதமராக பதவியேற்று 26 நாட்களில் இராஜினாமா

by Staff Writer 06-10-2025 | 7:47 PM

Colombo (News 1st)  பிரான்ஸின் புதிய பிரதமராக பதவியேற்ற செபஸ்டியன் லுகோர்னு 26 நாட்களுக்கு பின்னர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளுடன் உரிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் பிரதமராக செயற்பட இயலாதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை முன்வைக்க விரும்பவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். 

அமைச்சரவை அவரை பிரதமராக அறிவித்து 14 மணித்தியாலங்களின் பின்னர் எலிசி அரண்மனையால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

செபஸ்டியன் லுகோர்னு இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்தின் கீழ் 02 வருடங்களுக்குள் நியமிக்கப்பட்ட 05ஆவது பிரதமராவார்.

இவரது இராஜினாமாவிற்கு பின்னர் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.