.webp)
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்காவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
40 வயதான தோமஸ் சான்பர்ட்ஸ் என்ற சந்தேகநபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.