CBI விசாரணை கோரும் தமிழக வெற்றிக் கழகம்

CBI விசாரணை கோரும் தமிழக வெற்றிக் கழகம்

by Staff Writer 29-09-2025 | 12:49 PM


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூரில் நேற்று முன்தினம்(27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து CBI விசாரணையை தமிழக வெற்றிக் கழகம் கோரியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று(28) விசாரணை நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரூர் சம்​பவம் விபத்​து​ போன்று தெரிய​வில்​லை எனவும் திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​வதாகவும் சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கண்​காணிப்பு கமெரா காட்​சிகளை பாது​காக்க உத்​தர​விட வேண்​டும் எனவும் நடந்த சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்த வேண்​டும் என அவர்கள் கூறியுள்ளனர்.