H-1B விசா திட்டத்திற்கான கட்டணத்தில் திருத்தம்

அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கான கட்டணத்தில் திருத்தம்

by Staff Writer 21-09-2025 | 12:19 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இன்று(21) முதல் மேலதிகமாக ஒரு இலட்சம் டொலர் வருடாந்த கட்டணமாக அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று(20) இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கட்டணம் செலுத்தாமல் நாட்டிற்குள் பிரவேசித்தல் மற்றும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமையை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டணம் ஒரேதடவையில் செலுத்தப்பட வேண்டுமென வௌ்ளை மாளிகையின் செயலாளர் Karoline Leavitt தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகளை பெறுவதில் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களிடையே H-1B விசா மிகவும் விரும்பப்படும் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விசா வகையாகக் கருதப்படுகிறது.

2004ஆம் ஆண்டிலிருந்து H-1B விசா மூலம் வருடாந்தம் 85,000 பேர் வரையில் அமெரிக்காவிற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.