.webp)
அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலின் பின்னர் அரச ஊழியர்களின் தரவுக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, சுமார் 04 மாதங்களாக சில அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை முழுமையாக செலுத்த முடியாமல் போயுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ச்சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த வருடம் ஓய்வு பெற்ற மிகச் சிலர் எவ்வித ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.