.webp)
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலீ லங்காபுரவுக்கு அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரினால் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில் வௌியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் கருத்துக்களை வௌியிட்டதாக குற்றஞ்சாட்டி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த கருத்துக்களின் ஊடாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் 3 (1) சரத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றமா அல்லது தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆவது சரத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றமா என்பதை ஆராய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.