.webp)
காணியற்ற குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது.
இதன் முதற்கட்டம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
முதற்கட்டத்தில் 4,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் காணியற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு காணி உரிமையை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென காணி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.