.webp)
ஆகஸ்ட் மாதத்திற்கான சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் இன்று(27) வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
599,730 பயனாளர்களுக்கான கொடுப்பனவு இன்றைய தினம் வங்கிகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்காக அரசாங்கத்தினால் 2,900 மில்லியன் ரூபா வரையான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.