.webp)
பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடைந்த நிலையில் தபால் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்தது.
தாமதமான தபால் விநியோக சேவைகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார கூறினார்.
பணிப்பகிஷ்கரிப்பினால் நாடு முழுவதும் சுமார் 25 இலட்சம் தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் எந்த தபால் பொதிகளும் தேங்கவில்லையென சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.