.webp)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தனது யூடியூப் பக்கத்தில் காணொளியொன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்க சென்ற போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்படுவாரென கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.