.webp)
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் தொலைதூர பஸ்களுக்கான ஒன்றிணைந்த நேரஅட்டவணை இன்றிரவு (25) முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
முதற்கட்டமாக கொழும்பிலிருந்து புத்தளம் - சிலாபம் வழித்தடத்தில் யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ.சந்திரபால கூறினார்.
புதிய திட்டம் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - மன்னார், கொழும்பு - குளியாபிட்டிய மார்க்கங்களிலும், கொழும்பு - புத்தளம், அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சேவைகளில் ஈடுபடும் பஸ்களை இணைத்து இந்த ஒன்றிணைந்த நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன பொதுமக்களுக்கு தனித்தனியாக வழங்கிய சேவையை அரச மற்றும் தனியார் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே நேர அட்டவணையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பீ.ஏ. ச்சந்ரபால மேலும் கூறினார்.