கிளிநொச்சி வாகன விபத்தில் யுவதி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் - டிப்பர் மோதிய விபத்தில் யுவதி உயிரிழப்பு

by Staff Writer 31-07-2025 | 12:35 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் இன்று(31) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் அதே திசையில் பயணித்த டிப்பர் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் யுவதி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்