டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எண்ணிக்கையை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டம்

by Staff Writer 30-07-2025 | 6:59 PM

Colombo (News 1st) நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எண்ணிக்கையை 30 வீதத்தால் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான தௌிவுபடுத்தல் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு பிரிவின் பணிப்பாளர் K.V.K.அல்விஸ் தெரிவித்தார்.

டிஜிட்டல் கொடுப்பனவு பிரிவில் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்படும் Online banking கொடுக்கல் - வாங்கல்கள் மற்றும் வங்கி அட்டைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் உள்ளடங்குமென அவர் கூறினார்.

நாளாந்தம் 16,50,000 கொடுக்கல் - வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொடர்பான மேம்படுத்தல்களுக்கமைய நாளாந்தம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எண்ணிக்கையை 21,50,000 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு பிரிவின் பணிப்பாளர் K.V.K.அல்விஸ் தெரிவித்தார்.