.webp)
கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ள 08 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த 2 வீடமைப்பு திட்டங்களூடாக 750 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதனை தவிர நடுத்தர வருமானம் ஈட்டுவோரை இலக்காகக் கொண்டு பேலியகொடை பகுதியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்ட 2 தொடர்மாடி குடியிருப்பு திட்டங்கள் ஒருகொடவத்தை பகுதியில் 2 வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ஸ்டேடியம் கம வீடமைப்பு திட்டம் ஆகியவற்றை மீள ஆரம்பிப்பதற்காக புதிய முதலீட்டாளர்களை கண்டறிந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அனுராதபுரம் நகரில் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்காக நிர்மாணிக்கப்படவிருந்த தொடர்மாடிக் குடியிருப்பு திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுமானப் பணிகளையும் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.