.webp)
இந்த வருடம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்தது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவருமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை அடையுமென அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் பின்பற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் காரணமாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபை 79 திட்டங்களைப் பெற்றுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதில் 40 புதிய திட்டங்களும் தற்போதுள்ள வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான 39 திட்டங்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த முதலீடுகளின் பெறுமதி 4,669 மில்லியன் ஆகும்.