.webp)
Colombo (News 1st) காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் காற்றின் வேகம் 50 முதல் 55 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படுமென எச்சரிக்கை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.