.webp)
Colombo (News 1st) நுவரெலியா - ஹட்டன் A7 பிரதான வீதியில் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று(10) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவை பார்வையிட சென்றவர்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.