.webp)
ராகம பட்டுவத்தை பகுதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுப்படும் நபரான ஆமி உபுல் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ராகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100g 50mg ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 03 ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 45 வயதான ஆமி உப்புல் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.