.webp)
Colombo (News 1st) உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி எல்லைகள் இன்று(01) முதல் திருத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய மாதாந்தம் வரி அறவிடப்படாத எல்லை ஒரு இலட்சம் ரூபாவில் இருந்து 150,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மேலும் சில வரிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி இன்று முதல் திருத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை வரி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபா என்ற சம்பள எல்லை 150,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 150,000 ரூபாவை மாதாந்த சம்பளமாக பெற்ற ஒருவரிடம் 3500 ரூபா உழைக்கும்போது செலுத்தும் வரியாக அறவிடப்பட்டிருந்தது.
புதிய திருத்தத்திற்கு அமைய அந்த வரி நீக்கப்பட்டுள்ளது.
2 இலட்சம் ரூபா சம்பளத்தை பெற்ற ஒருவர் இதுவரை 10,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டியிருந்ததுடன் புதிய திருத்தத்திற்கு அமைய அந்த தொகை 3,000 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2 இலட்சம் ரூபா சம்பளத்தை பெறும் ஒருவருக்கு 7,500 ரூபா வரி நிவாரணம் கிடைக்கவுள்ளது.
3 இலட்சம் ரூபா சம்பளம் பெறும் ஒருவருக்கு 16,500 ரூபா வரி நிவாரணம் கிடைக்கவுள்ளது.
இதேவேளை, வைப்பீட்டாளருக்கு செலுத்த வேண்டிய வட்டி மீதான வரியும் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயிலும் 18 வயதுக்கு குறைவானவர்களின் வைப்பீடுகளுக்கான வட்டி மீதான வரி தொடர்பில் நிவாரணத்தை கோர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவெளை, வௌிநாடுகளுக்கு வழங்குகின்ற சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 15 வீத வரி அறவிடப்படவுள்ளது.