.webp)
Colombo (News 1st) நாட்டில் கித்துள், தென்னை மற்றும் பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக வருடாந்தம் புதுப்பிக்கத்தக்க வகையில் விபத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை செயற்படுத்த விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை இந்த திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.