.webp)
Colombo (News 1st) தெங்கு செய்கையாளர்களுக்கு மானிய விலையில் உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று(30) ஆரம்பிக்கப்படவுள்ளது.
'தென்னைக்கு பலம் - அதிக விளைச்சல்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, சந்தையில் 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் நிறையுடைய உரப்பை 4,000 ரூபா மானிய விலையில் தெங்கு செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.