முன்னாள் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் பலி

முன்னாள் சிறைச்சாலை உதவி அத்தியட்சகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

by Staff Writer 13-03-2025 | 7:08 PM

Colombo (News 1st)காலி - அக்மீமன, தலகஹ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காலி பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் உதவி அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் அவர் தமது வீட்டு முற்றத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

09 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.