மன்னார் துப்பாக்கிச்சூடு : விளக்கமறியல் நீடிப்பு

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 10-03-2025 | 10:25 PM

Colombo (News 1st) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களில் ஐவர் ஏற்கனவே அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக இன்று மன்றில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக வந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேகநபர்கள் அடங்கலாக 7 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.