ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்

ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்

by Staff Writer 12-03-2025 | 1:37 PM

Colombo (News 1st)பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து டாக்கா நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி (Zakir Hossain) சாகிர்  ஹுசைன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை  கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பங்களாதேஷில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த  ஆகஸ்ட் 05 ஆம் திகதி இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்தார்.