நொச்சியாகம வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நொச்சியாகம வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 24-10-2024 | 12:52 PM

Colombo (News 1st) நொச்சியாகம - அந்தரவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சாரதியின் மகள் உள்ளிட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.