Colombo (News 1st) உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 50 ரூபாவாக காணப்பட்ட உருளைக்கிழங்கிற்கான விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி விசேட வர்த்தக வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.