Colombo (News 1st) கொக்கோ, கராம்பு, மிளகு தொழிற்றுறையில் ஈடுபடுவோருக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கொக்கோ, கராம்பு, மிளகு உற்பத்தி சார் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக 1,856 ரூபா 19 சதம் அறிவிக்கப்பட்டுள்ளது.