உலக மலேரியா தினம் இன்று(25)

உலக மலேரியா தினம் இன்று(25)

by Staff Writer 25-04-2024 | 8:31 AM

Colombo (News 1st) உலக மலேரியா தினம் இன்றாகும்(25).

'சுகாதார சமத்துவம், பாலினம் மற்றும் மனித உரிமைகள்' எனும் தொனிப்பொருளில் மலேரியா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டமைக்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் 2016 ஆம் ஆண்டு வழங்கியது.

இலங்கையில் கடந்த வருடம் 62 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஆபிரிக்க நாடுகளுக்கு பயணித்து பின்னர் நாடு திரும்பியவர்களுக்கு மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்