Fox Hill விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Fox Hill விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

by Bella Dalima 04-05-2024 | 6:40 PM

Colombo (News 1st) Fox Hill விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 2,50,000 ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற 2024 Fox Hill கார் பந்தயத்தின் போது, ​​ஒரு கார் தடத்தை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில், சிறுமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததுடன்,  சிலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.