ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 25% அதிகரிப்பு

ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 25% அதிகரிப்பு

by Bella Dalima 09-02-2024 | 3:32 PM

Colombo (News 1st) ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 

அதிகரிக்கப்பட்ட VAT மூலம் அரசாங்கத்திற்கு 274 பில்லியன் வருமானம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். 

ஜனவரி மாதத்தில் சுங்கத் திணைக்கள வருமானத்தை விட 11 வீதமும் கலால் திணைக்கள வருமானத்தை விட 16.6 வீதமும் அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளதாக  நேற்று (08) அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.