பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர்களுக்கான ஆலோசனை

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தலைவரின் ஆலோசனை

by Staff Writer 06-08-2023 | 2:36 PM

Colombo (News 1st) நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மற்றும் அவர்கள் சார்பாக சாட்சியமளிக்கக்கூடிய நபர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சிறப்பு குழுவிற்கு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை ஆவணமொன்றை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியதாக விசேட குழுவின் தலைவர், சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கைகளை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறு பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.