.webp)
Colombo(News1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்றும்(06) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை(07) மீண்டும் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை நாளை(07) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவை இன்றும்(06) நாளையும்(07) வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்நாட்களில் 24 மணித்தியால சேவை முன்னெடுக்கப்படாது.
இன்றும் மேல் மாகாண வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் பிரிவு மூடப்பட்டுள்ளது.
குறித்த பிரிவின் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனை மீண்டும் திறக்கும் முதல் நாளில் அபராதத்தொகையை செலுத்தாமல் உரிய கட்டணங்களை மாத்திரம் செலுத்தி வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண பிரதம செயலகம் தெரிவித்துள்ளது.
இன்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து மக்கள் சேவைகளும் முன்னெடுக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.