.webp)
Colombo (News 1st) 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 226 ஆசனங்களை பெற்றிருந்தது.
எனினும், நேற்று(06) நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று(07) காலை 9.52 வரையில் வௌியாகிய முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 234 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலையிலுள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்கள் கிடைத்திருந்தது.
இருந்தபோதிலும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று(07) காலை 9.52 வரை வௌியாகிய முடிவுகளின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 13 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.