திருகோணமலை துறைமுக பகுதியில் எண்ணெய் கசிவு

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் கசிவு

by Staff Writer 29-11-2026 | 8:03 AM

COLOMBO (News 1st) திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அவதானிக்கப்பட்ட சிறிய அளவிலான எண்ணெய் கசிவை அகற்றுவதற்கு கடலோர பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று (28) காலை அவதானிக்கப்பட்ட இந்த எண்ணெய் கசிவு சுமார் 07 மீற்றர் நீளமும் 02 மீற்றர் அகலமும் கொண்ட படலமாக பரவியுள்ளது.

இதற்கமைய, உரிய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் 6 பேர் கொண்ட குழுவொன்று உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் பரவுவதை கட்டுப்படுத்தவும், சூழவுள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கவும் எண்ணெய்யை மாத்திரம் அகற்றக்கூடிய கருவிகளை மாத்திரம் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.