.webp)

Colombo (News 1st) ரஷ்ய சட்ட மாஅதிபர் Alexander Gutsan நேற்றிரவு(25) நாட்டை வந்தடைந்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய சட்ட மாஅதிபர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அவர் இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
