பிரபல சமையல்கலை நிபுணர் Chef தாமு காலமானார்..

பிரபல சமையல்கலை நிபுணர் Chef தாமு காலமானார்..

by Staff Writer 25-10-2026 | 3:54 PM

Colombo (News 1st) இந்தியாவின் பிரபல சமையற்கலை நிபுணர் செஃப் தாமு என அழைக்கப்படும் கே.தாமோதரன் தனது 72ஆவது வயதில் இன்று(25) காலமானார்.

உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அன்னார் 2010ஆம் ஆண்டு 24 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் 12 விநாடிகளில் 617 விதமான உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சமையல்கலையில் அவர் ஆற்றியுள்ள சாதனைகளை பாராட்டி கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

உணவக முகாமைத்துவம், சமையல் கலை தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல்கலை நிபுணர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அன்னாரின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமது எக்ஸ் தள பதிவில் இரங்கல் செய்தி வௌியிட்டுள்ளார்.