சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 6000இனால் குறைந்துள்ளது

by Staff Writer 19-10-2026 | 9:33 AM

COLOMBO (News 1st) சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 6000இனால் குறைந்துள்ளது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை துரிதமாக வெளியிடப்பட்டமையையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 11,000 கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்க முடியும்.
எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 36,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.