.webp)
-561102.jpg)
COLOMBO (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒருங்கிணைப்பு செயலாளர் சஞ்சய சமரசிங்க என்பவரின் வீட்டை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் இன்று (17) காலை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 - 2016 காலப்பகுதியில் சஞ்சய சமரசிங்க காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய இன்று (17) அதிகாலை கல்கிசையிலுள்ள அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது வீட்டிலிருந்த சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு பெட்டகமொன்றினை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சஞ்சய சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைக்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
