.webp)
-561101.jpg)
COLOMBO (News 1st) மக்கள் ஆணையின் பிரஜைகள் அமைப்பின் சிலரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று கொழும்பில் இன்று (17) முன்னெடுக்கப்பட்டது
திருடர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் தண்டனை வழங்குவதற்கு எதிரான சூழ்ச்சியை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று (17) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்ட பேரணி கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
பௌத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்தப் பின்னர் பொலிஸாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி இல்லையெனவும், ஜனாதிபதி மேலதிக செயலாளர் கபில பண்டார அங்கு உள்ளதாகவும் பொலிஸார் இதன்போது பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் கடிதமொன்றை கையளித்த பின்னர் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தரப்பினர் அங்கிருந்து வௌியேறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
