.webp)
-625840-561038.jpg)
Colombo (News 1st) சிறைக்கைதியாக உள்ள பிக்கு ஒருவர் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துறவற ஆடையை அணிந்திருக்க முழுமையான அனுமதி கிடைக்கும் வகையில் நிலையான கட்டளைகளை திருத்துமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளையும் நிலையான கட்டளைகளையும் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே நீதியமைச்சர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
சிறைச்சாலை சட்ட விதிகளையும் நிலையான கட்டளைகளையும் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிடம் இன்று(14) பிற்பகல் கையளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி சட்ட ரீதியான விடயங்களைத் திரிபுபடுத்தி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தற்போது சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பாகவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
சிறைச்சாலைகள் சட்டத்தின் நிலையான கட்டளையின் 550 ஆவது பிரிவை மேற்கோள்காட்டி ஐக்கிய தேசியக் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி சட்ட ரீதியான விடயங்களைத் திரிபுபடுத்தி, மக்களிடையே பொய்யான தகவல்களைப் பரப்ப முயற்சிப்பதாக People’s Tomorrow அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
