.webp)
-560926.jpg)
Colombo (News 1st) முதியோர் இல்லங்களுக்காக வௌியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையை பின்பற்றுவதற்கு சலுகைக் காலம் வழங்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வழிகாட்டல்கள் கோவை, எதிர்காலத்தில் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி, சர்வதேச முதியோர் தினத்தன்று முதியோர் இல்லங்களுக்காக புதிய வழிகாட்டல் கோவை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது பின்பற்றப்படும் வழிகாட்டல்கள் 2012 ஆம் ஆண்டு வௌியிடப்பட்டதாகவும், அதனை தற்போதைய காலத்திற்கேற்ப மாற்றுவதற்காக இந்த புதிய வழிகாட்டல் கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் அவர்களின் பாதுகாப்பு அண்மையில் பேசுபொருளாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
முதியோர் இல்லங்களை நடத்திச் செல்வதற்குரிய தகைமைகள் தொடர்பில் இந்த வழிகாட்டல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், 2012 இல் வௌியிடப்பட்ட வழிகாட்டல்களில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் நடைமுறை விடயங்களுக்கேற்ப வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
முதியோர்கள் என்பவர்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய தரப்பினர் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இந்த வழிகாட்டலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முதியோர் இல்லங்களை பாராமரிப்பவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான கட்டண விபரம் என்பன தொடர்பில் புதிய வழிகாட்டல் கோவையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் மேலும் தெரிவித்தார்.
